Published : 06 Jan 2025 08:22 PM
Last Updated : 06 Jan 2025 08:22 PM
‘பாகுபலி 2’ சாதனையை முறியடித்து, ‘புஷ்பா 2’ புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது.
இந்தியாவில் தயாரான படங்களுள் அதிக வசூல் செய்த படம் ஆமிர்கான் நடிப்பில் வெளியான ‘டங்கல்’. இப்படம் ரூ.1950 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் ‘பாகுபலி 2’ இருந்தது. இப்படம் ரூ.1,810 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது, ‘பாகுபலி 2’ வசூல் சாதனையை ‘புஷ்பா 2’ முறியடித்துள்ளது. இப்படம் வெளியான 32 நாட்களில், உலக அளவில் ரூ.1,831 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதேவேளையில், இந்திய சினிமா துறை அளவில் அதிகபட்ச வசூல் படமாக ‘புஷ்பா 2’ புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இன்னும் பல மாநிலங்களில் இப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால், இந்தியாவின் முதல் ரூ.2,000 கோடி வசூல் படம் என்ற மாபெரும் சாதனையை ‘புஷ்பா 2’ படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், சுனில், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல்களுக்கு தேவி ஸ்ரீபிரசாத், பின்னணி இசைக்கு சாம் சிஎஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
‘புஷ்பா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் மட்டுமே வெளியாகி இருக்கிறது.
#Pushpa2TheRule is now Indian Cinema's INDUSTRY HIT with THE HIGHEST EVER COLLECTION FOR A MOVIE IN INDIA
The WILDFIRE BLOCKBUSTER crosses a gross of 1831 CRORES in 32 days worldwide #HistoricIndustryHitPUSHPA2
Book your tickets now!
https://t.co/tHogUVEOs1… pic.twitter.com/FExzrtICPh— Mythri Movie Makers (@MythriOfficial) January 6, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT