Published : 31 Dec 2024 08:55 AM
Last Updated : 31 Dec 2024 08:55 AM

11,600 நடனக் கலைஞர்களுடன் கின்னஸ் சாதனை படைத்த நடிகை!

தமிழில், வேதம், கண்ணன் வருவான், பாளையத்தம்மன், சபாஷ் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. திருமணத்துக்குப் பிறகு குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் அவர், அங்கு நடனப்பள்ளி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் தலைமையில் 11,600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் 10,176 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியே சாதனையாக இருந்தது.

கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்நடன நிகழ்ச்சியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 550 நடன ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இவர்கள் ஒரே மாதிரி உடையணிந்து 8 நிமிட பாடல் ஒன்றுக்கு நடனமாடினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x