Published : 26 Dec 2024 08:58 AM
Last Updated : 26 Dec 2024 08:58 AM
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர், ஜானி மாஸ்டர். தமிழில் அரபிக்குத்து, ரஞ்சிதமே, காவாலா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இவரது குழுவில் இடம்பெற்றிருந்த 21 வயது பெண் நடன கலைஞர் ஒருவர், தன்னை கடந்த 5 வருடமாகப் பலமுறை ஜானி மாஸ்டர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஹைதராபாத் போலீஸில் புகார் கூறினார்.
வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஜானி மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், அவர் மீது சைபராபாத் போலீஸார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு சதீஷ் கிருஷ்ணனுடன் இணைந்து ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். இதன் நடனத்துக்காகத் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. போக்சோவில் கைதானதால் ஜானி மாஸ்டருக்கான விருது நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT