Published : 18 Dec 2024 09:32 AM
Last Updated : 18 Dec 2024 09:32 AM

நடிகர் பிரபாஸ் காயம்

நடிகர் பிரபாஸ் இப்போது ‘தி ராஜா சாப்’ என்ற படத்​தில் நடித்து வருகிறார். மாருதி இயக்​கும் இந்த ஹாரர் காமெடி படத்​தின் படப்​பிடிப்​பில் அவர் காயமடைந்​துள்ளார். சண்டைக் காட்​சி​யில் நடிக்​கும் போது அவருடைய கணுக்​காலில் பலத்த காயம் ஏற்பட்​டதைத் தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்​டுள்​ளது.

அவர் கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்​டும் என மருத்​துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்​நிலை​யில் அவர் நடித்​துள்ள ‘கல்கி 2898 ஏடி’ ஜப்​பானில் அடுத்த ​மாதம் 3-ம் தேதி வெளி​யாகிறது. அங்கு இதற்கான புரமோஷன் நிகழ்ச்​சிகளில் அவர் பங்​கேற்க இருந்​தார். இந்த கா​யம் ​காரணமாக அவர் ஜப்​பான் செல்​ல​வில்லை. இதற்​காக அந்நாட்டு ரசிகர்​களிடம்​ மன்னிப்பு கேட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x