Published : 02 Dec 2024 03:11 AM
Last Updated : 02 Dec 2024 03:11 AM
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’, வரும் 5-ம் தேதி வெளியாகிறது. படத்தை விளம்பரப் படுத்தும் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை ராணுவம் என்று அழைப்பது வழக்கம். அவர்கள் தனக்காகப் போராடுகிறார்கள் என்றும் கூறுவார். சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியிலும் அப்படிக் குறிப்பிட்டார். இந்நிலையில், ரசிகர்களை ராணுவம் என்று அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லு அர்ஜுன் மீது ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் னிவாஸ் என்பவர் ஜவஹர் நகர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதில், ராணுவம் என்ற வார்த்தை, நாட்டுக்குச் சேவை செய்வதற்குப் பயன்படுத்தும் மரியாதைக்குரிய பெயர். அது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்புடைய விஷயம். அதைப் பொருட்படுத்தாமல் அல்லு அர்ஜுன், அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது ஆயுதப் படைகளின் தியாகத்தைச் சிறுமைப்படுத்துவதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டி, நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT