Last Updated : 29 Sep, 2024 12:01 PM

 

Published : 29 Sep 2024 12:01 PM
Last Updated : 29 Sep 2024 12:01 PM

உருவாகிறது ‘பாகமதி 2’ - அனுஷ்கா கதாபாத்திரம் எப்படி?

அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ படத்தின் 2-ம் பாகம் உருவாவது உறுதியாகி இருக்கிறது. 2018-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘பாகமதி’.

ஜி.அசோக் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், முரளி சர்மா உள்ளிட்ட பலர் அனுஷ்கா உடன் நடித்திருந்தனர். ஸ்டூடியோ க்ரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வெளியிட்டது. தற்போது இதன் 2-ம் பாகம் உருவாக இருப்பதை இயக்குநர் அசோக் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

முதல் பாகத்தை விட இதில் அனுஷ்கா கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும் எனவும், 2025-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் அசோக். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது.

தற்போது தெலுங்கு படமான ‘காட்டி’ மற்றும் முதல் மலையாள படமான ‘காத்தனார்’ ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் அனுஷ்கா. இதனை முடித்துவிட்டு ‘பாகமதி 2’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x