Published : 16 Jul 2024 09:10 AM
Last Updated : 16 Jul 2024 09:10 AM
பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான அரோமா மணி காலமானார். அவருக்கு வயது 84.
மலையாளத்தில் சுனிதா புரொடக் ஷன்ஸ் சார்பில், ஒரு சிபிஐ டைரி குறிப்பு, துருவம், கமிஷனர், கள்ளன் பவித்ரன் உட்பட 62-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர் அரோமா மணி. ஏழு படங்களை இயக்கியும் உள்ளார்.
தமிழில், வினயன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘காசி’, ஆர்.பாலு இயக்கத்தில் முரளி நடித்த ‘உன்னுடன்’, பாசில் இயக்கத்தில் பிரபு நடித்த ‘அரங்கேற்ற வேளை’ உட்பட சில படங்களைத் தயாரித்துள்ளார்.
வயது முதிர்வு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள அவர் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவர் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அருவிக்கரையில் உள்ள அவரது வீட்டு தோட்டத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அரோமா மணி மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT