Published : 08 Jul 2024 09:08 PM
Last Updated : 08 Jul 2024 09:08 PM

ஷங்கர் - ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு நிறைவு

சென்னை: 3 ஆண்டுகள் படப்பிடிப்புக்குப் பிறகு ராம் சரணனின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை ராம்சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர், ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி நாயகி. அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜரகண்டி’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ அண்மையில் வெளியானது.

கடந்த 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக ராம் சரண் தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பின் முதல் நாள் புகைப்படத்தையும், இறுதி நாள் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x