Published : 15 Jun 2024 04:18 PM
Last Updated : 15 Jun 2024 04:18 PM

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ செப்.27-ல் ரிலீஸ்!

ஹைதராபாத்: ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்துள்ளார்.

‘தேவரா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கின. இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கு முன்பாகவே படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 27-ம் தேதி பான் இந்தியா முறையில் இப்படம் வெளியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x