Published : 14 Jun 2024 07:57 PM
Last Updated : 14 Jun 2024 07:57 PM

கான் விழாவில் விருது வென்ற ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படக்குழுவை கவுரவித்த கேரள அரசு!

திருவனந்தபுரம்: கான் பட விழாவில் கலந்துகொண்டு விருது வென்ற ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படக்குழுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் அழைத்து பாராட்டினார்.

அண்மையில் பிரான்ஸில் நடந்து முடிந்த ‘கான் பட விழா’வில் உயரிய விருதான ‘கிராண்ட் ப்ரி’ விருதை பெற்றது ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine As Light) மலையாள திரைப்படம். இப்படத்தை பாயல் கபாடியா இயக்கியுள்ளார். கனு குஸ்ருதி, திவ்ய பிரபா, ஹிருது ஹாரூன் மற்றும் அஜீஸ் நெடுமங்காட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் கான் பட விழாவில் திரையிடப்பட்ட பின் பார்வையாளர்கள் எழுந்து நின்று படக்குழுவினரை பாராட்டினர்.

இந்நிலையில், இந்தப் படக்குழுவை கேரள அரசு நேரில் அழைத்து கவுரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “கிராண்ட் பிரி வென்ற ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த நான்கு மலையாள நடிகர்களான கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, அஸீஸ் நெடுமங்காட் மற்றும் ஹிருது ஹாரூன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். குவைத் சோகம் காரணமாக விழா கொண்டாட்டங்கள் இன்றி நடைபெற்றது. எதிர்காலத்தில் கலைஞர்கள் சிறந்து விளங்க வாழ்த்துகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x