Published : 11 Apr 2018 07:18 PM
Last Updated : 11 Apr 2018 07:18 PM
‘ஜிமிக்கி கம்மல்’ பாட்டுக்கு டான்ஸ் ஆடி புகழ்பெற்ற ஷெரிலுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘வெளிப்படிண்டே புஸ்தகம்’. இந்தப் படத்தில், ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாடலுக்கு, தன்னுடன் பணிபுரிபவர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருந்தார், கேரளாவைச் சேர்ந்த ஷெரில். இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் ஷெரில் டான்ஸ் ஆடிய வீடியோ, மிகப்பெரிய வைரலானது. 2017ஆம் ஆண்டு இந்திய அளவில் யூ டியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ அதுதான்.
‘பிரேமம்’ படம் வெளியானபோது எப்படி மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவிக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் பெருகினார்களோ, அதேபோல ஷெரிலுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.
இந்நிலையில், பிரஃபுல் டாமி அமம்துரதில் என்பவருடன் ஷெரிலுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தொடுபுழாவில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணத் தேதி குறித்த தகவல் கிடைக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT