Published : 14 Feb 2018 08:49 PM
Last Updated : 14 Feb 2018 08:49 PM
மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஃபார் டான்ஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆதில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.
'பிட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். இவரிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த விஜயராஜ் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தை இயக்குகிறார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் இப்புதிய படத்தில் ஆதில் என்பவர் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.
மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஃபார் டான்ஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆதில் என்பது கவனிக்கத்தக்கது. கதாநாயகியாக 'சென்னை 2 சிங்கப்பூர்; படத்தில் நடித்த அஞ்சு குரியன் நடிக்கிறார். இவர்களுடன் ஈரோடு மகேஷ், குரேஷி, ஈஸ்வர ரகுநாதன், நிம்மி இமானுவேல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு கிரிநந்த் இசையமைக்க உள்ளார். ஆலன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT