Published : 26 Feb 2024 10:58 AM
Last Updated : 26 Feb 2024 10:58 AM
ஹைதராபாத்: பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் கதை மகாபாரதத்தில் இருந்து தொடங்கி 2898-ல் முடிகிறது என்று அப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ரிலீசாகவுள்ளது. அறிவியல் புனைவு திரைப்படமான இதன் அறிமுக வீடியோ வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய இப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் கூறும்போது, ’கல்கி 2898 ஏடி’ படத்தின் கதை மகாபாரதத்தில் இருந்து தொடங்கி 2898-ல் முடிகிறது. அதுதான் படத்தில் டைட்டில். அதுவே ‘கல்கி 2898 ஏடி’ எனப்படுகிறது. அதன் பிறகு 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுகிறது. அந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக முயன்றுள்ளோம். இதை முடிந்த வரை ‘பிளேட் ரன்னர்’ பாணியில் இல்லாமல் இந்திய பின்னணியிலேயே உருவாக்கியுள்ளோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT