Published : 25 Oct 2023 06:22 PM
Last Updated : 25 Oct 2023 06:22 PM

பாலகிருஷ்ணா Vs ரவிதேஜா - வசூலில் முந்துவது யார்? 

தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்தாக ஆயுதபூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ மற்றும் ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்து பார்ப்போம்.

பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகியுள்ள ‘பகவந்த் கேசரி’ படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, சரத்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ‘லியோ’ வெளியான அக்டோபர் 19-ம் தேதி வெளியான இப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ.32 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. படம் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையில் உலக அளவில் மொத்தமாக படம் இதுவரை ரூ.80 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என கூறப்படுகிறது.

அதபோல வம்சி இயக்கத்தில் ரவிதேஜா நடித்துள்ள ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அனுபம் கேர், காயத்ரி பரத்வாஜ், நாசர், விடிவி கணேஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் வெளியான 5 நாட்களில் இதுவரை உலக அளவில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலகிருஷ்ணா படத்தைக் காட்டிலும் ரவிதேஜாவின் படம் வசூலில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x