Published : 13 Sep 2023 01:52 PM
Last Updated : 13 Sep 2023 01:52 PM

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ‘கேஜிஎஃப்’ யஷ்?

பெங்களூரு: ‘கேஜிஎஃப்’ யஷ் நடிக்கவுள்ள 19-வது படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் கீது மோகன்தாஸ். தமிழில் சத்யராஜ் நடித்த ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் சிறுமியாக நடித்திருந்தார். கமல் தயாரிப்பில் மாதவன் நடித்திருந்த ‘நளதமயந்தி’ படத்தில் நாயகியாக நடித்தார். இது தவிர மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தியில் நவாசுதீன் சித்திக் நடித்த ’லயர்’ஸ் டைஸ்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. கடைசியாக நிவின் பாலி நடிப்பில் ‘மூத்தோன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், ‘கேஜிஎஃப்’ யஷ் நடிக்கும் 19-வது படத்தை கீது மோகன்தாஸ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கேஜிஎஸ் 1 & 2’ படங்களுக்குப் பிறகு யஷ் பான் இந்தியா நடிகராக மாறினார். நாடு முழுவதும் அவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது. அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் மாஸ் ஆக்‌ஷன் படமாக இல்லாமல், அழுத்தமான கதைக்களத்தை கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x