Published : 11 Sep 2023 05:29 PM
Last Updated : 11 Sep 2023 05:29 PM

அடுத்த ஆண்டு ஆக.15-ல் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா தி ரூல்’ ரிலீஸ்

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா தி ரூல்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து அறிவிக்கபட்டுள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஹிட்டாகின. பான் இந்தியா முறையில் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இப்படம், அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்றது.

இதன் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ கடந்த ஏப்ரல் 5-ம் தேதி வெளியானது. இந்நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்துக்காக அல்லு அர்ஜூனுக்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x