Published : 07 Sep 2023 09:34 PM
Last Updated : 07 Sep 2023 09:34 PM
“நிச்சயம் ஒருநாள் உங்களில் பாதியாக இருப்பேன் அப்பா” என நடிகர் மம்மூட்டியின் பிறந்த நாளுக்கு அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் சிறுவனாக இருந்தபோது உங்களைப்போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன்முறையாக கேமரா முன்னால் நின்ற போது உங்களைப்போன்ற நடிகனாக வேண்டும் என விரும்பினேன். தந்தையானபோது நான் ஆக விரும்பிய அனைத்தும் நீங்களாக இருந்தீர்கள். என்றாவது ஒரு நாள் உங்களில் பாதியாக இருப்பேன் என்று நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மம்மூட்டியின் நடிப்பில், ‘காதல் தி கோர்’, ‘கண்ணூர் ஸ்குவாட்’, ‘பிரமயுகம்’, ‘பிரம்மயுகம்’ உள்ளிட்ட படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...