Published : 29 Dec 2017 04:13 PM
Last Updated : 29 Dec 2017 04:13 PM
உலக வெப்பமயமாதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் பதிவுக்கு நடிகர் சித்தார்த் காட்டமாக பதில் ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், உலக வெப்பமயமாக்கல் குறித்து வியாழக்கிழமை பதிவிட்டுருந்தார்.
In the East, it could be the COLDEST New Year’s Eve on record. Perhaps we could use a little bit of that good old Global Warming that our Country, but not other countries, was going to pay TRILLIONS OF DOLLARS to protect against. Bundle up!
— Donald J. Trump (@realDonaldTrump) December 29, 2017
ட்ரம்பின் பதவுக்கு கீழே பலரும், முதலில் காலநிலை பருவத்துக்கும், உலக வெப்பமயமாக்கலுக்கும் உள்ள வித்தியாசத்தை கற்றுக் கொள்ளுங்கள் என்று பதவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சித்தார் ட்ரம்ப்பின் பதிவை குறிப்பிட்டு சற்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், என்னதான் இருந்தாலும் அமெரிக்கா போன்ற ஒரு நாட்டின் அதிபரை சித்தார்த் இவ்வாறு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்க வேண்டாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT