Last Updated : 02 Nov, 2017 04:09 PM

 

Published : 02 Nov 2017 04:09 PM
Last Updated : 02 Nov 2017 04:09 PM

கே.எஸ்.ரவிக்குமார் - பாலகிருஷ்ணா இணையும் ஜெய் சிம்ஹா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்திருக்கும் 'ஜெய் சிம்ஹா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு

தமிழில் ரஜினி நடித்த 'லிங்கா' படத்தைத் தொடர்ந்து கன்னடத்தில் சுதீப் நடித்த படத்தை இயக்கினார் கே.எஸ்.ரவிக்குமார். அப்படம் தமிழில் 'முடிஞ்சா இவனைப் பிடி' என்ற தலைப்பில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் 102-வது படத்தை இயக்க ஒப்பந்தமானார் கே.எஸ்.ரவிக்குமார். நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு பெயரிடப்படாமலே படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

பெரும்பகுதி படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ள நிலையில், 'ஜெய் சிம்ஹா' என்ற பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்து, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ஹரிப்பிரியா, நடாஷா உள்ளிட்டோரும் இதில் நடித்திருக்கிறார்கள். ஜனவரி 12-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x