Published : 02 Nov 2017 01:07 PM
Last Updated : 02 Nov 2017 01:07 PM
'சாஹோ' படத்துக்காக இந்தியத் திரையுலகின் மிக நீண்ட துரத்தல் காட்சியை படமாக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஷ்ரதா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்துக்காக துபாயில் பிரம்மாண்டமாக துரத்தல் காட்சியை படமாக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. பைக்குகள், கார்கள், லாரிகள் அனைத்தையும் வைத்து துபாயில் இக்காட்சியை எடுக்கவுள்ளார்கள். இதற்காக பிரத்யேக அனுமதி வாங்கியுள்ளனர். 'சாஹோ' படத்தின் பொருட்செலவில் பெரும் பகுதி, இச்சண்டைக்காட்சிக்கே செலவழிக்கவுள்ளார்கள்
படத்தில் இக்காட்சி சுமார் 20 நிமிடங்கள் இடம்பெறவுள்ளது. இந்தியத் திரையுலகில் இவ்வளவு நீளமான துரத்தல் காட்சி இதுவரை வந்ததில்லை. அக்காட்சிகளை வடிவமைக்க ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் கென்னி பேட்ஸ் பணிபுரியவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT