Published : 24 Jul 2023 05:27 AM
Last Updated : 24 Jul 2023 05:27 AM

லக்‌ஷ்மன் இயக்கத்தில் நிகில் குமாரசாமி

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கியவர் லக்‌ஷ்மன். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த்சாமி நடித்த ‘போகன்’ படத்தை இயக்கினார். அடுத்து ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படத்தை இயக்கினார்.

இவர் இப்போது கன்னடப் படம் இயக்குகிறார். கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், கன்னடத்தில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதம் பெங்களூருவில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

‘ஜாக்குவார்’ படம் மூலம் அறிமுகமான நிகில் குமாரசாமி, ‘சீதாராம கல்யாணா’, ‘குருஷேத்ரா’, ‘ரைடர்’ படங்களில் நடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x