Published : 21 Jul 2023 06:28 PM
Last Updated : 21 Jul 2023 06:28 PM

சிறந்த நடிகர் மம்மூட்டி, சிறந்த படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ - 53வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியல்

53-வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் தேர்வாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்கான கேரளா மாநில திரைப்பட விருதுகள் (53rd Kerala State Film Awards) தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை கேரளாவின் கலாச்சார விவகாரங்கள் துறை அமைச்சர் சஜி செரியன் அறிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 19-ம் தேதியே இந்த விருதுகள் அறிவிக்கபடுவதாக இருந்தது. ஆனால், அம்மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மறைவையடுத்து தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த விருது பட்டியல் வெளியாகியுள்ளது.

  • சிறந்த படம்: நண்பகல் நேரத்து மயக்கம்
  • சிறந்த நடிகர்: மம்மூட்டி (நண்பகல் நேரத்து மயக்கம்)
  • சிறந்த நடிகை: வின்சி அலோஷியஸ் (ரேகா)
  • சிறந்த இயக்குநர்: மகேஷ் நாராயணன் (அறியிப்பு)
  • சிறந்த குணச்சித்திர நடிகர்: பி பி குஞ்சிகிருஷ்ணன் (ன்னா தான் கேஸ் கொடு)
  • சிறந்த குணச்சித்திர நடிகை: தேவி வர்மா (சவுதி வெள்ளக்கா)
  • ஸ்பெஷல் ஜூரி மென்ஷன் (நடிப்பு) - குஞ்சாக்கோ போபன் (ன்னா தான் கேஸ் கொடு) மற்றும் அலென்சியர் லே லோபஸ் (அப்பன்)
  • ஸ்பெஷல் ஜூரி மென்ஷன் (இயக்கம்) - பிஸ்வஜித் எஸ் மற்றும் ரரீஷ்

பிரபலமான மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட சிறந்த திரைப்படம்: ன்னா தான் கேஸ் கொடு

  • சிறந்த குழந்தைகள் திரைப்படம்: பல்லோட்டி 90'ஸ் கிட்ஸ்
  • சிறந்த கதை எழுத்தாளர்: கமல் கே.எம் (பதா)
  • சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் (ன்னா தான் கேஸ் கொடு)
  • சிறந்த திரைக்கதை (தழுவல்): ராஜேஷ் பின்னடன் (ஒரு தேக்கன் தள்ளு கேஸ்)
  • சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்): எம் ஜெயச்சந்திரன் (பத்தொன்பதாம் நூற்றாண்டு மற்றும் ஆயிஷா)
  • சிறந்த ஆண் பாடகர்: கபில் கபிலன் (பல்லோட்டி 90'ஸ் கிட்ஸ் திரைப்படத்தின் "கனவே" பாடலுக்காக
  • சிறந்த பெண் பாடகர்: மிருதுளா வாரியர் (பத்தொன்பதாம் திரைப்படத்தின் "மயில்பீலி இலக்குன்னு கண்ணா" பாடலுக்காக)
  • சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை): டான் வின்சென்ட் (ன்னா தான் கேஸ் கொடு
  • சிறந்த படத்தொகுப்பாளர்: நிஷாத் யூசுப் (தல்லுமாலா)
  • சிறந்த ஒளிப்பதிவாளர்: மனேஷ் மாதவன் (எல வீழா பூஞ்சிரா) மற்றும் சந்துரு செல்வராஜ் (வழக்கு)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x