Published : 26 Jun 2023 06:15 AM
Last Updated : 26 Jun 2023 06:15 AM
ஹைதராபாத்: நடிகர் மகேஷ் பாபு இப்போது ‘குண்டூர் காரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் இந்தப் பிரம்மாண்ட ஆக்ஷன் படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்கின்றனர். நடிகை ஸ்ரீலீலா ஏற்கெனவே ஒப்பந்தமான நிலையில், மற்றொரு நாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதாகக் கூறப்பட்டது.
பின்னர் அவருக்குப் பதிலாக சம்யுக்தா நடிப்பதாக செய்திகள் வெளியாயின. இப்போது மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். தமன் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் அருகே ஜன்வாடாவில் நடந்து வருகிறது. நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழில், விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நடித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT