Published : 19 Jun 2023 06:15 AM
Last Updated : 19 Jun 2023 06:15 AM

மலையாள நடிகர் பூஜப்புரா ரவி காலமானார்

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் பூஜப்புரா ரவி நேற்று காலமானார். அவருக்கு வயது 86.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புராவைச் சேர்ந்தவர் ரவி. 1970-களில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பின்னர் பூஜப்புரா ரவி என்று அழைக்கப்பட்டார். அவள் ஒரு தேவாலயம், சங்கமம், கிலுக்கம், காலாபாணி, தஷ்கரவீரன் உட்பட சுமார் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக டோவினோ தாமஸ்நடித்த ‘குப்பி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாக வயதுமுதிர்வு காரணமான உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இடுக்கி மாவட்டத்தில் உள்ள மரயூரில் அவர் மகள் வீட்டில் வசித்து வந்த அவர் நேற்று காலமானார். அவர் மறைவுக்கு மலையாளத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x