Published : 08 Apr 2015 05:34 PM
Last Updated : 08 Apr 2015 05:34 PM
உலகப் புகழ் பெற்ற சூப்பர்ஹீரோ பேட்மேன் (Batman) சென்னையில் பிறந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என யாராவது கற்பனை செய்ததுண்டா? அவர் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ன சாப்பிடுவார்? சென்னை சாலைகளில் தனது விசேஷ வாகனத்தில் எப்படி செல்வார் என நினைத்துப் பார்த்ததுண்டா? இவை எல்லாவற்றையும் வைத்து புது வீடியோ ஒன்றை புட் சட்னி (Put Chutney) என்ற குழு யூடியூபில் பதிவேற்றியுள்ளது. பதிவேற்றிய சில மணி நேரங்களிலேயே வீடியோ வைரலாகியுள்ளது.
வீட்டில், ரோட்டில், சென்னை சாலைகளில் பேட்மேனின் சவால்கள் என்னவாக இருக்கும், அதை அவர் எப்படியெல்லாம் எதிர்கொள்கிறார் என ஆரம்பம் முதல் கடைசிவரை 8 நிமிடங்கள் ஓயாமல் சென்னை பேட்மேனை வைத்து சிரிக்க வைத்துள்ளனர் புட் சட்னி குழு. இதில் பேட்மேனின் சித்தப்பாவாக நடித்திருப்பது, நடிகர் டெல்லி கணேஷ்.
கல்சர் மெஷின் (Culture Machine) என்ற பொழுதுபோக்கு வீடியோ நிறுவனம், ஏற்கனவே கல்சர் மெஷின் என்ற பெயரில் யூடியூபில் பல்வேறு சுவாரசிய வீடியோக்களை பதிவேற்றியுள்ளது. தற்போது இந்த குழு, ஏப்ரல் 8 முதல், தென்னிந்திய மக்களைக் குறிவைத்து புட் சட்னி என்ற பெயரில் புதிய யூடியூப் சானலோடு களமிறங்கியுள்ளது.
தொடர்ந்து கிரிக்கெட் நம்பிக்கைகள், பொறியியல் படித்த இளைஞனின் வாழ்க்கை, வாழை இலையில் சாப்பிடுவது என பல்வேறு வகையான நகைச்சுவை வீடியோக்களை புட் சட்னி பதிவேற்றவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT