Published : 13 May 2019 11:39 AM
Last Updated : 13 May 2019 11:39 AM

அரசியல் ஆதாயத்துக்காக சொந்த மனைவியையே கைவிட்டவர் மோடி: மாயாவதி தாக்கு

அரசியல் ஆதாயத்துக்காக தனது சொந்த மனைவியையே கைவிட்டவர் மோடி என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை ஒரு கும்பல் இரண்டு பைக்குகளில் விரட்டி வந்தது. அவர்களை வழிமறித்து, மறைவிடத்துக்கு தூக்கிச் சென்ற கும்பல் கணவரை தாக்கியது.

 

அந்த கும்பல், கணவரின் கண்முன்னே அவரது மனைவியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தது.  சம்பவம் குறித்து புகார் அளித்தும் கண்டுகொள்ளாத காவல்துறை, மே மாதம் 7-ம் தேதி வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்தது. இதற்கு மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில் இதை குறிப்பிட்டுப் பேசினார். அப்போது அவர்,''தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அம்மாநில காவல்துறையும் மாநில அரசும் இந்த தவற்றை தடுக்க தவறி விட்டது. மற்ற பல மாநிலங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தபோது ஆவேசமாக பேசியவர்கள் இப்போது ஏன் அமைதியாகி விட்டார்கள். அவர்கள் பின்னணி என்ன?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

 

இந்நிலையில் இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, ''அல்வார் கூட்டு பலாத்கார வழக்கில், இத்தனை நாட்களாக மோடி அமைதியாக இருந்தார். இப்போது தேர்தல் வந்ததும் அதைப் பற்றிப் பேசுகிறார். இதன்மூலம் அவர் தரம் தாழ்ந்த அரசியலை மேற்கொள்ள முயற்சி செய்கிறார். இதன்மூலம் தேர்தலில் அவரின் கட்சிக்கு நன்மைகள் கிடைக்கும். இது மிகவும் அவமானகரமானது.

 

அரசியல் ஆதாயங்களுக்காக அவரின் சொந்த மனைவியையே கைவிட்டவர் மற்றவர்களின் சகோதரிகளையும் மனைவிகளையும் எப்படி மதிப்பார்'' என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x