Published : 27 Jan 2019 10:23 AM
Last Updated : 27 Jan 2019 10:23 AM
திருமணத் தகவல் மையம் நடத்தும் திரு (பிரபுதேவா) 99 திருமணங்களை வெற்றிகர மாக நடத்தி வைக்கிறார். ஆனால் அவருக்கு மட்டும் பெண் கிடைக்க வில்லை. ஆனால் சாராவை (நிக்கி கல்ராணி) கண்டதும் காதலில் விழுகிறார் திரு. அது கல்யாணம் வரை வந்துவிடுகிறது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் திரு விடம் அவரது காதலி பற்றி சந்தேகம் ஒன்றைக் கிளப்புகிறான் நண்பன் ஒருவன். தலைக்கேறிய போதையில் அதை நம்பும் திரு, காதலி சாராவையும் அவளது குடும் பத்தாரையும் ஏடாகூடமான வார்த்தைகளால் திட்டி, ஒரு செல்ஃபி வீடியோ எடுத்து அதை காதலியின் வாட்ஸ் அப்புக்கு அனுப்புகிறார். போதை தெளிந்த தும் காதலியை சந்தேகப்பட்டது தவறு எனத் தெரிகிறது.
அந்த வீடியோவை காதலி திறந்து பார்த்துவிட்டால் கதை முடிந்தது என்ற நிலையில், அதை தடுக்க திருவும் நண்பர்களும் முயற்சிக்கிறார்கள். இந்தக் குழம் பியக் குட்டையில் சாரா என்ற பெயர் கொண்ட இன்னொரு பெண்ணும் நுழைய, இரண்டாவது சாராவுக்கும் ‘ஐ லவ் யூ’ சொல்லவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகிறார் திரு. இறுதியில் திருவின் நிலை என்ன? எந்த சாராவைக் கரம்பற்றினார் என்பதுதான் கதை.
ஒருவரிக் கதையை வைத் துக்கொண்டு மிகச் சுமாரான நகைச்சுவைக் காட்சிகள் கொண்ட, புதுமை ஏதும் இல்லாத திரைக்கதை வழியே சமாளிக்க முயல்கிறார் இயக்குநர் சக்தி சிதம்பரம். முதல் பாதியின் அறுவைகள், இரண்டாம் பாதியில் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் உட்கார முடிகிறது.
நடனமாடுவதுபோலவே தனது கதாபாத்திரத்தையும் துருதுரு வென ஊதித் தள்ளியிருக்கும் பிரவுதேவாவுக்கு நகைச்சுவை நடிப்பும் நன்றாகவே வருகிறது. முதல் சாராவாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, உளவியல் மாணவி யாக வரும் அதா ஷர்மா இருவருக் கும் நடிக்கவும் நடனமாடவும் வாய்ப்பு வழங்கியிருப்பது இயக் குநரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
விவேக் பிரசன்னா, அரவிந்த் ஆகாஷ், சாம்ஸ் என மூன்று பேர் பிரபுதேவாவின் நண்பர் களாக வந்து சிரிக்க வைக்க முயற் சிக்கிறார்கள். இதில் விவேக் பிரசன்னாவின் டைமிங் சென்ஸ் நன்று.
பிரபுதேவா குடும்பமும் நிக்கி கல்ராணி குடும்பமும் திருமணத்துக்காக திருப்பதிக்குப் போய்ச் சேர்ந்த பிறகும் நடக்கும் சம்பவங்களின் நாடகம் டி.வி சீரியல் தோற்றுப்போகும் அள வுக்கு இருக்கிறது. இரண்டாம் பாதி நாடகத்தில் இழையோடும் நகைச்சுவைக்குள் எதிர்பாராத திருப்பங்கள் சில இருப்பதால் சீரியல் தன்மையை மீறி படம் தப்பிக்கிறது.
பொழுதுபோக்கை எதிர் பார்த்து வருபவர்களுக்கு பாடல் களும் நடனமும் ஆறுதலாக அமை கின்றன. ‘சின்ன மச்சான்’ பாடலில் நிக்கி கல்ராணி, பிரவுதேவானின் நடனமும் படமாக்கமும் 90-களின் திரைப்படங்களை நினைவூட்டு கின்றன. அம்ரிஷ் இசையில் பாடல் கள் தாளம்போட வைத்தாலும் பின்னணி இசையில் பின்தங்கிவிடு கிறார். இந்தப் பின்னடைவுகளை ஈடுகட்டுவது சவுந்தர்ராஜனின் ஒளிப்பதிவு. இரண்டு இளமையான கதாநாயகிகள், படத்தை தோளில் சுமந்து தனது துள்ளல் நடிப்பால் முட்டுக்கொடுத்திருக்கும் பிரபு தேவா ஆகிய காரணங்களுக்காக படத்தை பார்க்கலாம். ஆனால் அதிக நகைச்சுவையை எதிர் பார்த்து செல்வது ஏமாற்றத்தில் முடியலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT