Published : 14 Jan 2025 11:53 PM
Last Updated : 14 Jan 2025 11:53 PM

சேலையில் வந்த தேவதை - அமலா பால் பொங்கல் க்ளிக்ஸ்!

நடிகை அமலா பால் பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

2009-ம் ஆண்டு வெளியான ‘நீல தாமரா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் அமலா பால்.

‘சிந்து சமவெளி’ மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து ‘மைனா’ திரைப்படம் அவருக்கென தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.

2011-ல் வெளியான ‘தெய்வ திருமகள்’ படத்தில் அமலா பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அடுத்து ‘வேட்டை’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘தலைவா’ படங்களில் நடித்தார்.

‘அம்மா கணக்கு’, ‘ஆடை’, ‘கடாவர்’ படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

அண்மையில் அவர் நடிப்பில் ‘ஆடுஜீவிதம்’ வெளியானது. அதேபோல அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள ‘லெவல் கிராஸிங்’ மலையாள படத்தில் அமலா பாலின் நடிப்பு பாராட்டப்பட்டது.

அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்தார். இவர்களது குழந்தைக்கு ‘இலை’ என்று பெயர் சூட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x