Published : 02 Jan 2023 02:47 PM
Last Updated : 02 Jan 2023 02:47 PM
ஹாலிவுட் நடிகரான ஜெர்மி ரென்னர் பனிப்புயல் காரணமாக விபத்தில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘தி ஹர்ட் லாக்கர்’ படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர். அதேபோல 2010-ம் ஆண்டு வெளியான ‘தி டவுன்’ படத்தின் சிறந்த துணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் ஹாலிவுட்டின் மார்வல் சீரிஸ் படங்களான ‘அவெஞ்சர்ஸ்’, ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ படங்களில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெர்மி ரென்னர்.
இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று பனிப்புயல் ஒன்று தாக்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. இது தொடர்பான விவரம் அறியாமல், ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ஜெர்மி ரெனர் காரில் சென்றுள்ளார். அப்போது, கடும் குளிர் காற்றுடன் ஏற்பட்ட பனிப்பொழிவால், கட்டுப்பாட்டை இழந்த ரென்னரின் கார் சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், படுகாயமடைந்த ரென்னரை மீட்டு,அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில், ‘விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஜெர்மி ரென்னர் ஆபத்தான நிலையில் உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT