Published : 24 May 2022 01:05 PM
Last Updated : 24 May 2022 01:05 PM
டாம் குரூஸ் நடிக்கும் 'மிஷன்: இம்பாசிபிள் - டெட் ரெகனிங் (பாகம் 1)' (Mission: Impossible Dead Reckoning Part 1) படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் 'மிஷன்: இம்பாசிபிள்' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் அடுத்து வெளியாக உள்ள மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7-ம் பாகத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கியுள்ள இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டி உள்ளார் டாம் க்ரூஸ்.
'மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்' என பெயரிடப்பட்டு உள்ள இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. இதன் முதல் பாகம் வருகிற 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இரண்டாம் பாகம் 2024-ம் ஆண்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மிஷன் இம்பாசிபிள் ஹாலிவுட் திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment