Published : 10 Jan 2022 10:25 AM
Last Updated : 10 Jan 2022 10:25 AM
ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ‘கோல்டன் குளோப்ஸ்’. ஆண்டு தோறும் அமெரிக்காவின்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக மிக எளிய முறையில் நடைபெற்றது.
நேற்று (ஜன. 9) நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்களின் முழுமையான பட்டியல் இதோ:
சிறந்த படம் : தி பவர் ஆஃப் டாக் (இயக்கம்: ஜேன் கேம்பியன்)
சிறந்த திரைக்கதை: பெல்ஃபாஸ்ட் (இயக்கம்: கென்னத் ப்ரனா)
சிறந்த நடிகை: நிக்கோல் கிட்மேன் (திரைப்படம்: பீயிங் தி ரிக்கார்டோஸ்)
சிறந்த நடிகர் : வில் ஸ்மித் (திரைப்படம் : கிங் ரிச்சர்ட்)
சிறந்த திரைப்படம் (மியூசிக்கல் அல்லது காமெடி) : வெஸ்ட் சைட் ஸ்டோரி (இயக்கம்: ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்)
சிறந்த நடிகை (மியூசிக்கல் அல்லது காமெடி): ரேச்சல் ஸெக்லர் ( திரைப்படம்: வெஸ்ட் சைட் ஸ்டோரி)
சிறந்த நடிகர் (மியூசிக்கல் அல்லது காமெடி): ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் (திரைப்படம்: டிக் டிக்... பூம்)
சிறந்த துணை நடிகை: அரியானா டி போஸ் (திரைப்படம்: வெஸ்ட் சைட் ஸ்டோரி)
சிறந்த துணை நடிகர்: கோடி ஸ்மிட்- மெக்ஃபீ (திரைப்படம்: தி பவர் ஆஃப் தி டாக்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: என்கேன்டோ (இயக்கம்: பைரான் ஹாவர்ட், ஜேரட் புஷ்)
சிறந்த பின்னணி இசை: ட்யூன் (இசை: ஹான்ஸ் ஜிம்மர்)
சிறந்த பாடல்: நோ டைம் டு டை (படம்: நோ டைம் டு டை)
சிறந்த அயல்மொழி திரைப்படம்: ட்ரைவ் மை கார் (ஜப்பான்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT