Published : 28 Oct 2021 11:38 AM
Last Updated : 28 Oct 2021 11:38 AM
‘ரஸ்ட்’ விபத்துக்குக் காரணமான துப்பாக்கியைத் தான் பரிசோதித்துக் கொடுத்திருக்க வேண்டும் என்று அப்படத்தின் உதவி இயக்குநர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான அலெக் பால்ட்வின் நடித்து, இணைந்து தயாரிக்கும் படம் 'ரஸ்ட்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நியூ மெக்ஸிகோவின், சாண்டா ஃபே பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த இடத்தில் ஏற்கெனவே பல ஹாலிவுட் திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன.
இதில் படப்பிடிப்புக்காக போலியான ஒரு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது. வெடித்தால் சப்தம் மட்டும் வருவது போன்ற அந்தத் துப்பாக்கியை நடிகர் அலெக் பால்ட்வின் இயக்கியபோது உண்மையாகவே அதிலிருக்கும் குண்டு பாய்ந்துவிட்டது. இதில் படத்தின் ஒளிப்பதிவாளரான ஹலினா ஹட்சின்ஸ் மரணமடைந்தார். இயக்குநர் ஜோயல் சோஸா படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் படக்குழுவினரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ‘ரஸ்ட்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய டேவிட் ஹால்ஸ் என்பவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தன்னிடம் அந்தத் துப்பாக்கி கொடுக்கப்பட்டபோது அதைப் பரிசோதித்திருக்க வேண்டும் என்று டேவிட் ஹால்ஸ் போலீஸாரிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், தான் அந்தத் துப்பாக்கியைப் பார்த்தபோது அதில் உட்புறம் துளைகளைக் கொண்ட நான்கு டம்மி குண்டுகள் இருந்தது தனக்கு நினைவில் இருப்பதாகவும், இது உள்நோக்கத்துடன் நடந்த ஒரு நிகழ்வல்ல என்றும் டேவிட் ஹால்ஸ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT