Published : 25 Oct 2021 11:07 AM
Last Updated : 25 Oct 2021 11:07 AM
ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான அலெக் பால்ட்வின் நடித்து, இணைந்து தயாரிக்கும் படம் 'ரஸ்ட்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நியூ மெக்ஸிகோவின், சாண்டா ஃபே பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த இடத்தில் ஏற்கெனவே பல ஹாலிவுட் திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன.
இதில் படப்பிடிப்புக்காக போலியான ஒரு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது. வெடித்தால் சப்தம் மட்டும் வருவது போன்ற அந்தத் துப்பாக்கியை நடிகர் அலெக் பால்ட்வின் இயக்கியபோது உண்மையாகவே அதிலிருக்கும் குண்டு பாய்ந்து விட்டது. இதில் படத்தின் ஒளிப்பதிவாளரான ஹலினா ஹட்சின்ஸ் மரணமடைந்தார். இயக்குநர் ஜோயல் சோஸா படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் படக்குழுவினரிடம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அலெக் பால்ட்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அலெக் பால்ட்வின் தான் நடிக்க வேண்டிய அனைத்து படங்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விபத்து தான் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்திருந்தாலும் அலெக் பால்ட்வின் சிறிது காலம் தனது குடும்பத்துடன் இருக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT