Published : 13 Jun 2021 12:10 PM
Last Updated : 13 Jun 2021 12:10 PM
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1981ஆம் ஆண்டு வெளியான ‘இண்டியானா ஜோன்ஸ்: த ரைடர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க்’ திரைப்படம் உலகமெங்கும் பெரும் வெற்றி பெற்றது. இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து ‘இண்டியானா ஜோன்ஸ்: டெம்பிள் ஆஃப் டூம்’ (1984), ‘இண்டியானா ஜோன்ஸ்: த லாஸ்ட் க்ருஸேட்’ (1989), இறுதியாக ‘இண்டியானா ஜோன்ஸ்: கிங்டம் ஆஃப் த க்ரிஸ்டல் ஸ்கல்’ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது இண்டியானா ஜோன்ஸின் 5ஆம் பாகத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதியில் தடைப்பட்டது. தற்போது பிரிட்டனில் கரோனா கட்டுக்குள் வந்துவிட்டதால் கடந்த வாரம் ‘இண்டியானா ஜோன்ஸ்’ 5ஆம் பாகத்துக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதுவரை வெளியான 4 இண்டியானா ஜோன்ஸ் படங்களையும் இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்தப் படத்தை இயக்கவில்லை. அவர் விலகியதையடுத்து ‘வால்வரின்’ ‘லோகன்’, ‘ஃபோர்ட் வி ஃபெராரி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் மேங்கோல்ட் இப்படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இதுவரை இண்டியானா ஜோன்ஸாக நடித்த ஹாரிஸன் ஃபோர்ட்தான் இதிலும் ஹீரோ. அவருக்குத் தற்போது வயது 78.
இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT