Published : 07 Jun 2021 10:08 AM
Last Updated : 07 Jun 2021 10:08 AM

‘ஜான் விக் 4’ படத்தில் இணைந்த சீன நடிகர் 

கேயானு ரீவ்ஸ் நடிப்பில் வெளியாகி ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஜான் விக்’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜான் விக்’ 2 மற்றும் 3ஆம் பாகங்களும் வெளியாகின. இதுவரை வெளியான மூன்று 'ஜான் விக்' திரைப்படங்களும் சேர்ந்து மொத்தமாக 579 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாகவும் இந்தப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

தற்போது இப்படத்தின் நான்காம் பாகத்துக்கான படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரோனா நெருக்கடியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு பணிகள் தற்போது மீண்டும் தொடங்கி ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ‘ட்ரிப்பிள் எக்ஸ்’, ‘ஐபி மேன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான சீன நடிகர் டோனி யென் இணைந்துள்ளார். இதில் கேயானு ரீவ்ஸின் பழைய நண்பராக வரும் ஒரு கதாபாத்திரத்தில் டோனி யென் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘ஜான் விக் 4’ அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x