Published : 02 Nov 2020 10:50 AM
Last Updated : 02 Nov 2020 10:50 AM
1962ஆம் ஆண்டு வெளியான ‘டாக்டர் நோ’ படத்தின் மூலம் முதல் ஜேம்ஸ் பாண்டாக அறிமுகமானவர் ஷான் கானரி. அதனைத் தொடர்ந்து ‘ஃப்ரம் ரஷ்யா வித் லவ் ’(1963), ‘கோல்டுஃபிங்கர்’ (1964), ‘தண்டர்பால்’ (1965), ‘யு ஒன்லி லிவ் ட்வைஸ்’ (1967) ‘டைமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர்’ (1971) ‘லிவ் அண்ட் லெட் லிவ்’ (1973) ‘நெவர் சே நெவர் அகைன்’ (1983) உள்ளிட்ட ஏழு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தவிர 'தி அண்டச்சபிள்ஸ்', 'இண்டியானா ஜோன்ஸ்’,'தி ராக்' உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். ‘தி நேம் ஆஃப் தி ரோஸ்’ மற்றும் 'தி அண்டச்சபிள்ஸ்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் கானரி வென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த நவ. 1 அன்று தனது 90வது வயதில் ஷான் கானரி காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என உலகம் முழுக்க பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
ஷான் கானரி மறைவுக்கு மற்றொரு ஜேம்ஸ் பாண்ட் நடிகரான பியர்ஸ் ப்ராஸ்னன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
சர் ஷான் கானரி, நான் சிறுவனாக இருந்தபோதும், வளர்ந்து ஜேம்ஸ் பாண்டாகவே ஆன பிறகும் நீங்களே எனக்கு மிகச் சிறந்த ஜேம்ஸ் பாண்டாக இருந்தீர்கள். என்றென்றும் நீடித்திருக்க கூடிய ஒளியுடன் கூடிய ஒரு நீண்ட நிழலை நீங்கள் படரவிட்டுள்ளீர்கள்.
உங்கள் காலடித்தடங்களை பின்பற்றிய எங்கள் அனைவருக்கும் நீங்கள் வழிகாட்டினீர்கள். ஒவ்வொருவரும் தங்கள் முறை வரும்போது உங்களை மிகுந்த மரியாதையுடனும், வியப்புடனும் உங்களை பார்க்கின்றனர். நடிகனாக, மனிதனாக என எல்லா வழியிலும் நீங்கள் வலிமை படைத்தவராக இருந்தீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT