Last Updated : 16 Jun, 2020 10:41 AM

 

Published : 16 Jun 2020 10:41 AM
Last Updated : 16 Jun 2020 10:41 AM

கரோனா வைரஸ் அச்சம்: 2021-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

பிரதிநிதித்துவப்படம் : படம் ட்விட்டர்

வாஷிங்டன்


2021-ம் ஆண்டு வாஷிங்டனில் நடக்கும் 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி பிப்ரவரி மாதத்துக்கு பதிலாக ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்த ஒத்திவைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தி அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸஸ் மற்றும் ஏபிசி டெலிவிஷன் நெட்வொர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தி்்ட்டமிட்டபடி 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி 2021, பிப்ரவரி 28-ம் தேதி நடக்க இருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்த அச்சம் காரணமாக விருது வழங்கும் நிகழ்ச்சியை 8 வாரங்கள் தாமதமாக ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்படும் என நிர்வாகிகள் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர்

கடந்த 40 ஆண்டுகளி்ல் முதல்முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி தி்ட்டமி்ட்ட தேதியில் நடத்தப்படாமல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் இது 4-வது முறையாக மாற்றியமைகக்பட்டுள்ளது

கடைசியாக கடந்த1981-ம் ஆண்டு நடக்க இருந்த ஆஸ்கர் விருது திடீரென ஒத்திவைக்கப்பட்டது. ஏனென்றால், அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனை கொலை செய்யும் முயற்சி நடந்ததால், அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல 12-வது ஆண்டு கவர்னர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவம்பர் மாதம் நடக்கும் நிகழ்ச்சியும் இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1938-ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டதால் முதல் முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதுஅதன்பின் 1968-ம் ஆண்டு டாக்டர் மார்டின் லூதர் கிங்கை கொலை செய்ய முயற்சி நடந்த போது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி இரு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் 1981-ம் ஆண்டு முன்னாள் அமெரிக்கஅதிபர் ரொனால்ட் ரீகனை கொலை செய்யும் முயற்சி நடந்த போது நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x