Published : 17 Apr 2020 12:49 PM
Last Updated : 17 Apr 2020 12:49 PM
‘ராம்போ: ஃபர்ஸ்ட் ப்ளட்’, ‘டாம்மி பாய்’, ‘டூ கேட்ச் எ கில்லர்’, உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ரையன் டென்னஹி மரணமடைந்தார். அவருக்கு வயது 81.
1938 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கனக்டிகட் மாகாணத்தில் பிறந்த ப்ரையன் டென்னஹி தனது இளம் வயதில் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சில காமெடிப் படங்களில் தலைகாட்டிக் கொண்டிருந்த ப்ரையனுக்கு 1970களில்தான் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்கள் கிடைக்கத் தொடங்கின. ‘செமி டஃப்’, ‘ஃபவுல் ப்ளே’, ‘செவி சேஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ஒரு நடிகராக அறியப்பட்ட ப்ரையனுக்கு 1982 ஆம் ஆண்டு சில்வஸ்டர் ஸ்டோலன் நடிப்பில் வெளியான ‘ராம்போ: ஃபர்ஸ்ட் ப்ளட்’ படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பிறகு வெளியான ‘ஸ்ப்ளிட் இமேஜ்’, ‘லீகல் ஈகிள்ஸ்’, ‘ப்ராஃபெட் ஆஃப் ஈவில்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார் ப்ரையன். 1995 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படமான ‘டாம்மி பாய்’ படத்தில் ப்ரையனின் கதாபாத்திரம் பேசப்பட்டது.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நியூ ஹேவன் நகரில் உள்ள தனது வீட்டில் ப்ரையன் டென்னஹி மரணமடைந்தார். இதை அவரது மகளும் நடிகையுமான எலிசபெத் டென்னஹி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து எலிசபெத் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நேற்றிரவு வயது மூப்பின் காரணமாக எங்கள் தந்தை ப்ரையன் இறந்துவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். அவருக்கு கோவிட் தொற்று இல்லை. புகழ்பெற்ற, நேர்மையான மனிதரான அவர் தனது மனைவி ஜெனிஃபர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் மிஸ் செய்யப்படுவார்'' என்று கூறியுள்ளார்.
ப்ரையன் டென்னஹி மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
It is with heavy hearts we announce that our father, Brian passed away last night from natural causes, not Covid-related. Larger than life, generous to a fault, a proud and devoted father and grandfather, he will be missed by his wife Jennifer, family and many friends. pic.twitter.com/ILyrGpLnc3
— Elizabeth Dennehy (@dennehyeliza) April 16, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT