Published : 29 Feb 2016 08:36 AM
Last Updated : 29 Feb 2016 08:36 AM

ஆஸ்கர் விருதுகள் 2016 - வெற்றியாளர்கள் பட்டியல்

சிறந்த நடிகர்: காப்ரியோ, சிறந்த படம்: ஸ்பாட்லைட், விருதுகளை அள்ளியது 'மேட் மேக்ஸ்'

ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.. 88-வது ஆஸ்கர் திருவிழாவில் 2016-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ...

*சிறந்த ஒரிஜினல் திரைக்கதை- ஸ்பாட்லைட்

* சிறந்த தழுவல் திரைக்கதை- தி பிக் ஷார்ட்

* சிறந்த உறுதுணை நடிகை- அலிசியா விகந்தர் ( 'தி டேனிஷ் கேர்ள்' திரைப்படத்துக்காக விருது வழங்கப்பட்டுள்ளது)

* சிறந்த ஆடை வடிவமைப்பு- ஜென்னி பீவன் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த தயாரிப்பு வடிமைப்பு - (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்- (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த ஒளிப்பதிவு- இமானுவேல் லுபெஸ்கி - தி ரெவனன்ட் ( இவர் ஏற்கெனவே பேர்ட்மேன், கிராவிட்டி படங்களுக்காக ஆஸ்கர் பெற்றவர்)

* சிறந்த எடிட்டிங்- மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த ஒலித்தொகுப்பு - மார்க் மாங்கினி மற்றும் டேவிட் வைட் (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

சிறந்த ஒலித்தொகுப்புக்காக ஆஸ்கர் விருது பெற்ற மார்க் மாங்கினி, டேவிட் வைட்.| புகைப்படம்: கெட்டி இமேஜஸ்

* சிறந்த ஒலிக் கலவை- கிறிஸ் ஜெங்கின்ஸ், கிரெக் ருடோல்ஃப், பென் ஆஸ்மோ - (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த கிராபிக்ஸ் / விஷுவல் எஃபெக்ட்ஸ் - ஆண்ட்ரூ வைட்ஹர்ஸ்ட் , பால் நாரிஸ், மார்க் ஆர்டிங்க்டன், சாரா பென்னட் - எக்ஸ் மாகினா

* சிறந்த அனிமேஷன் குறும்படம் - பியர் ஸ்டோரி

* சிறந்த அனிமேஷன் திரைப்படம் - இன்ஸைட் அவுட்



விருதுப் பட்டியலில் முதலிடத்தில் 'மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு'



படம்

விருது எண்ணிக்கை

பிரிவுகள்

மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு

6

சிறந்த எடிட்டிங், சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த ஆடை வடிமைப்பு, சிறந்த ஒலித்தொகுப்பு, சிறந்த ஒலிக் கலவை, சிறந்த தயாரிப்பு வடிமைப்பு



* சிறந்த உறுதுணை நடிகர்: மார்க் ரைலான்ஸ் - படம்: பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்

* சிறந்த குறும்படம் (ஆவணப் பட பிரிவு) - எ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்

* சிறந்த ஆவணப்படம் - ஏமி (படத்தின் இயக்குநர்: ஆசிப் கபாடியா)

* சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - ஸ்டட்டரர்

* சிறந்த அயல்நாட்டு மொழி திரைப்படம் - சன் ஆஃப் சால் (ஹங்கேரி)

* சிறந்த இசை - எனியோ மோரிகானே - படம்: தி ஹேட்ஃபுல் எய்ட்

* சிறந்த பாடல் - ரைட்டிங்க்ஸ் ஆன் தி வால் - படம்: ஸ்பெக்டர்

* சிறந்த இயக்குநர்: அலயாந்த்ரோ கொன்ஸாலே இன்னாரித்து - தி ரெவனெண்ட்| சென்ற வருடமும் இன்னாரித்து சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கரை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* சிறந்த நடிகை - ப்ரீ லார்சன் - ரூம்' (Room)

* சிறந்த நடிகருக்கான விருது: லியானார்டோ டி காப்ரியோ ( தி ரெவனன்ட்)

* சிறந்த திரைப்படம்: ஸ்பாட்லைட்



கமல்ஹாசன் ட்வீட்:



"எனக்கு மிகவும் பிடித்த இரண்டு படங்களான தி ரெவனன்ட், மேட்மேக்ஸ் படங்களுக்கு மிகச்சரியான காரணங்களுக்காக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன" என ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் கருத்தி பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x