Published : 09 Apr 2025 07:30 AM
Last Updated : 09 Apr 2025 07:30 AM

ஹாலிவுட்​ நடிகர் ராபர்ட்​ டி நிரோவுக்​கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஹாலிவுட்​டின் பழம்​பெரும்​ நடிகர்களில் ஒருவர் ராபர்ட்​ டி நிரோ. 80 வயதான இவர், ‘ரேஜிங்​ புல்’, 'தி காட்​பாதர் பார்ட்​ 2’ படங்​களுக்​
காக 2 முறை சிறந்​த நடிகருக்​கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். 'டாக்​ஸி டிரைவர்', 'தி ஐரிஷ்மேன்', ‘த பிக்​ வெட்​டிங்​’, ‘ஜோக்​கர்’ என பல படங்​களில் நடித்​துள்ளார்.

கடந்​த சில வருடங்​களுக்​கு முன் இவர் அளித்​தபேட்​டியில், தனக்​கு​ சமீபத்​தில் 7-வது குழந்​தை பிறந்​தது என்று அறிவித்​திருந்​தார். இந்​நிலையில், இவருக்​கு 78-வது கேன்ஸ் திரைப்​பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்​கப்​பட இருக்​கிறது. மே மாதம்​ 13-ம்​ தேதி தொடங்​கும்​ விழாவில் இவ்விருது அவருக்​கு வழங்​கப்​பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x