Published : 08 Jan 2018 12:16 PM
Last Updated : 08 Jan 2018 12:16 PM
ஆஸ்கர் விருதுகளுக்கு அடுத்து பெரிய கவுரவமாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் ஹாலிவுட் பத்திரிகை கூட்டமைப்பால் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தந்த வருடத்தில் வந்த சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கும், கலைஞர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான 75-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில உள்ள தி பிவர்லி ஹில்டம் ஓட்டலில் வழங்கப்பட்டது.
விழாவை அமெரிக்க நகைச்சுவை நடிகர் சேத் மெயர்ஸ் தொகுத்து வழங்கினார்.
நடிகைகள் பலர் ஹாலிவுட் திரைப்பட உலகில் நிலவும் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்களுக்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து வந்திருந்தினர்.
விருது விவரம்:
திரைப்படங்கள் பிரிவு
சிறந்த திரைப்படம்: த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி
சிறந்த நடிகை:பிரான்சஸ் மெக்டோர்மண்ட் (த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி)
சிறந்த நடிகர்: கேர்ரி ஒல்டுமென் (டார்க்கஸ்ட் அவர்)
சிறந்த திரைப்படம் (இசை & நகைச்சுவை பிரிவில்):லேடி பேர்ட்
சிறந்த நடிகை (இசை & நகைச்சுவை படப்பிரிவில்): சாய்ரஸ் ரோனன் (லேடி பேர்ட்)
சிறந்த நடிகர் (இசை & நகைச்சுவை படப்பிரிவில்): ஜேம்ஸ் பிரான்கோ (தி டையாஸ்டர் ஹாடிஸ்ட்)
சிறந்த துணை நடிகை : அலிசன் ஜான்னே, சிறந்த துணை நடிகை (ஐ டோனியா)
சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல் (த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி)
சிறந்த இசையமைப்பு: தி ஷேப் ஆப் வாட்டர்
சிறந்த பாடல்: தி இஸ் மீ ( தி கிரேடஸ்ட் ஷோமென்)
சிறந்த திரைக்கதை: த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி
சிறந்த பிறமொழி திரைப்படம்: இன் தி ஃபேர்ட்
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: கோகோ
தொலைக்காட்சி
சிறந்த தொலைக்காட்சித் தொடர்: தி ஹேன்மெய்ட்ஸ் டேல்
சிறந்த நடிகை (தொலைக்காட்சித் தொடர்) : எலிசபெத் மோஸ் (தி ஹேன்மெய்ட்ஸ் டேல்)
சிறந்த நடிககர் (தொலைக்காட்சித் தொடர்): ஸ்டெர்லிங் கே.ப்ரவுன் (தி இஸ் அஸ்)
சிறந்த தொலைக்காட்சித் தொடர் (இசை & நகைச்சுவைப்பிரிவு): தி மார்வெல்லஸ் மிஸ் மைசல்
சிறந்த நடிகை (இசை & நகைச்சுவைப்பிரிவு): ரேச்சல் புரோஸ்னகன் (தி மார்வெல்லஸ் மிஸ் மைசல்)
சிறந்த நடிகர் (இசை & நகைச்சுவைப்பிரிவு): அசிஸ் அன்சாரி (மாஸ்டர் ஆப் நோன்)
வரையறுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள் பிரிவு
சிறந்த நாடகம்: பிக் லிட்டில் லைஸ்
சிறந்த நடிகர்: இவான் மெக்ரிகர் (ஃபார்கோ)
சிறந்த நடிகை: நிக்கோலா நிக்மன் (பிக் லிட்டில் லைஸ்)
சிறந்த துணை நடிகர்: அலெக்ஸ்சாண்டர் ஸ்கேர்ஸ்கார்ட் (பிக் லிட்டில் லைஸ்)
சிறந்த துணை நடிகை: லாரா டெர்ன் (பிக் லிட்டில் லைஸ்)
கோல்டன் குளோப்பில் கவுரவ விருதுகாக வழங்கப்படும் சிசில் பி. டிமெய்ல் விருது இவ்வருடம் அமெரிக்க நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT