Published : 03 Oct 2023 05:57 AM
Last Updated : 03 Oct 2023 05:57 AM

சினிமாவாகும் டைட்டன் நீர்மூழ்கி விபத்து

வடக்கு அட்லான்டிக் பெருங் கடலின் ஆழத்தில், டைட்டா னிக் கப்பலின் இடிபாடுகளைக் காண்பதற்காக ‘டைட்டன்’ என்ற ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், கடந்த ஜூன் மாதம் சென்றது. அதில் 5 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பேரழுத்தம் காரணமாக நீர்மூழ்கி சுற்றுலா வாகனம் உடைந்ததில், அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருப்பதாகவும், அதை பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் ஜேம்ஸ் கேமரூன் அதை மறுத்திருந்தார்.

இந்நிலையில் மைண்ட்ரியாட் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் இந்தச் சம்பவத்தை படமாக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சால்வேஜ்ட் (Salvaged) என்று பெயரிடப்பட்டுள்ள இதை ‘தி பிளாக்கெனிங்’ படத்தைத் தயாரித்த பிரையன் டாபின்ஸ், இணை தயாரிப்பு செய்கிறார். ஜஸ்டின் மேக்ரிகோர், ஜோனதன் கீசே திரைக்கதை எழுதுகின்றனர் யார் இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x