Published : 08 Mar 2023 05:39 AM
Last Updated : 08 Mar 2023 05:39 AM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், எம்.எஸ்.தோனி, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழில் படம் தயாரித்து வருகிறார். அவர் தயாரிக்கும் படத்துக்கு ‘எல்.ஜி.எம்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் ஹரீஷ் கல்யாண், இவானா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை தமிழ்மணி இயக்குகிறார்.
இந்நிலையில் அவருடைய நண்பரும் சக கிரிக்கெட் வீரருமான ரவீந்திர ஜடேஜாவும் படம் தயாரிக்கிறார். ‘பச்சாதர் கா ஜோரா’ (Pachhattar Ka Chhora) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜெயந்த் கில்டார் இயக்குகிறார். ரன்தீப் ஹூடா, நீனா குப்தா, சஞ்சய் மிஸ்ரா, குல்சன் குரோவர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT