Last Updated : 30 May, 2017 06:09 PM

 

Published : 30 May 2017 06:09 PM
Last Updated : 30 May 2017 06:09 PM

சீனாவில் 1000 கோடி ரூபாய் வசூலித்து தங்கல்’ சாதனை

ஆமிர்கானின் 'தங்கல்' திரைப்படம் சீனாவில் 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. சீன சினிமா வரலாற்றில் இந்த சாதனையை செய்யும் 33-வது திரைப்படம் 'தங்கல்' என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமிர்கான் நடிப்பில் ஃபோகட் சகோதரிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் 'தங்கல்'. 2016 டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த மே மாதம் 5-ஆம் தேதி 'தங்கல்' சீனாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியான நாள் முதல் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.

"ஒரு இந்திய திரைப்படத்துக்கு கிடைத்த எதிர்பாராத வெற்றி இது. இது ஒரு மைல்கல். 'தங்கல்' ஒரு சூப்பர் ஹிட் இந்தியப் படமாக உருவாகியுள்ளது" என சீனாவில் இந்தியப் படங்களை விளம்பரப்படுத்தும் ஸ்ட்ராடிஜிக் அலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரசாத் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

2 வாரங்களுக்கு மேல் சீன பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருந்த 'தங்கல்', கடந்த வாரம் 'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்துக்கு அந்த இடத்தை விட்டுத் தந்தது. ஆனால் இன்னும் 9000 திரைகளில் 'தங்கல்' தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது.

சீனாவில் 'தங்கல்' வெற்றியைத் தொடர்ந்து ஆமிர்கானை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 6.55 லட்சமக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x