Published : 11 Sep 2022 12:56 PM
Last Updated : 11 Sep 2022 12:56 PM
ரன்பீர் கபூர் நடிப்பில் திரையரங்குகளில் செப்டம்பர் 9-ம் தேதி வெளியான 'பிரம்மாஸ்திரா' திரைப்படம் இரண்டு நாள் வசூல் முடிவில் இந்திய அளவில் ரூ.70 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன்முகர்ஜி உள்ளிட்டோர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் 4 ஆண்டுகள் படமாக்கப்பட்டது. ஷாருக்கான், அமிதா பச்சன், நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படத்திற்கு ப்ரித்தம் இசையமைத்திருந்தார். சுமார் ரூ.410 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், படம் முதல் நாள் வசூலாக உலக அளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தார். இந்திய அளவில் படம் ரூ.36-38 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.
இரண்டாவது நாள் ரூ.37.5 கோடியை படம் வசூலித்துள்ளது. அதன்படி இரண்டு நாட்கள் முடிவில் இந்திய அளவில் மட்டும் படம் ரூ.70 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் 8,913 திரைகளில் படம் வெளியானது. இந்தியாவை பொறுத்தவரை 5,019 திரைகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Brahmāstra is SENSATIONAL at the #BO... *#Hindi* version... *#Nett* BOC...
Day 1: ₹ 31.5 cr - ₹ 32.5 cr
Day 2: ₹ 37.5 cr - ₹ 38.5 cr
Final total could be higher... #India biz.
National chains are seeing extraordinary numbers...
Day 1: ₹ 17.08 cr est
Day 2: ₹ 20.67 cr est pic.twitter.com/iO9X0eiE9v— taran adarsh (@taran_adarsh) September 11, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT