Published : 30 Dec 2021 06:56 PM
Last Updated : 30 Dec 2021 06:56 PM
முகலாயர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர் என்ற கருத்தைக் கூறி நெட்டிசன்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா.
அண்மையில் அவர், "தலிபான்களின் வெற்றியைகொண்டாடும் இந்திய முஸ்லிம்கள், நமது மதத்தை சீர்படுத்த வேண்டுமா அல்லது பழமையான காட்டுமிராண்டிதனத்துடன் வாழ வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும்" என்றொரு கருத்தைக் கூறினார்.
இப்போது, பேட்டி ஒன்றில் அவர், முகலாயர்கள் இந்தியாவை தங்களின் தாய்நாடாக்கிக் கொள்ளும் நோக்கில் அகதிகளாக வந்தனர். அவர்கள் வந்த இடத்தில் காலத்தால் அழியாத கலையம்சம் பொருந்திய நினைவுச் சின்னங்களைக் கட்டினர். நடனம், இசை, ஓவியம், இலக்கியம் என நிறைய படைப்புகளை தேசத்திற்காகக் கொடுத்தனர் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முகாலயர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்தனர். அவர்கள் அகதிகள் அல்ல. அவர்கள் இங்கு தஞ்சம் கோரவில்லை. இங்கே ஆட்சி செலுத்தும் ஆசையில், ராஜ்ஜியங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தினர். அவர்களுக்கென்று ஒரு கலாச்சாரம் இருந்தது. இந்தோ ஆர்யன் கலாச்சாரத்தின் கிளை என்று கூறலாம் என்றொரு நெட்டிசன் நசீருதின் ஷாவுக்கு விளக்கம் கூறியுள்லார்.
திரைப்படத்தில் சிவாஜி மஹாராஜாக நடித்தவர் நிஜத்தில் முகலாயர்களை அகதிகள் என்கிறாரே என்று கிண்டல் செய்துள்ளார் இன்னொரு நெட்டிசன்.
தற்கால சினிமாவைப் பற்றி பேசிய நசிரூதின் ஷா, இப்போதெல்லாம் நிறைய பேர் தங்களுக்குப் பிடித்த மாதிரி சினிமா எடுக்கின்றனர். இது வரவேற்கத்தக்கது. மராத்தி சினிமா அபார வளர்ச்சி கண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT