Published : 16 Feb 2021 11:21 AM
Last Updated : 16 Feb 2021 11:21 AM
நடிகர் ஆமிர்கானின் மகன் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.
பிரபல பாலிவுட் நடிகராக இருப்பவர் ஆமிர்கான். தற்போது புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் இந்தி வடிவமான ‘லால் சிங் சத்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆமிர்கானின் மகன் ஜுனைத் தற்போது பாலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகிறார். ஜுனைத் பல வருடங்களாக பல்வேறு மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். இந்தச் சூழலில் முதல் முறையாக பாலிவுட் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (15.02.21) மும்பையில் தொடங்கியது. இதை ஆமிர்கானின் மகள் ஐரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''இது ஜுனைத்தின் முதல் நாடகமோ அல்லது முதல் நிகழ்ச்சியோ அல்ல. இது அவரது முதல் நாள் படப்பிடிப்பு. எனக்கு இது மிகவும் பிடித்த புகைப்படம். அவர் பல வருடங்களாக நடித்துக் கொண்டிருந்தாலும் இது எனக்குப் புதிது. அவர் என்னுடைய நாடகத்திலும் நடித்துள்ளார். நான் மற்ற விஷயங்களை விட அவரது தங்கையாகத்தான் அதிக நாட்கள் இருந்துள்ளேன். அவருடைய தொழில் பக்தி அளவில்லாதது. அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரையும் அவர் ஆச்சர்யப்படுத்தப் போகும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்''.
இவ்வாறு ஐரா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT