Published : 24 Dec 2020 11:30 AM
Last Updated : 24 Dec 2020 11:30 AM
பாலிவுட் வாரிசு அரசியல் தொடர்பான கருத்துகள், சிவசேனா கட்சியினருடனான மோதல், சக கலைஞர்களுடனான வார்த்தைப் போர் வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார் கங்கனா. இதற்கு பஞ்சாபி பாடகர் திலிஜித் திலிஜித் தோசான்ஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று (23.12.20) மெக்ஸிகோ நாட்டில் உள்ள ஒரு கடற்கரையில் எடுக்கப்பட்ட பழைய படம் ஒன்றை கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் கங்கனா நீச்சல் உடையில் இருந்ததை குறிப்பிட்ட நெட்டிசன்கள் பலர் அவரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வந்தனர்.
அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கங்கணா தனது ட்விட்ட பக்கத்தில் கூறியுள்ளதாவது:
என்னுடைய நீச்சல் உடை புகைப்படத்தை பார்க்கும் சிலர் எனக்கு தர்மம் குறித்தும் சனாதனம் குறித்தும் பாடம் எடுக்கின்றனர். நீங்கள் வணங்கும் பெண் கடவுள் உங்கள் முன் கலைந்த தலைமுடியுடன், ரத்தம் குடித்தபடி தோன்றினால் என்ன நடக்கும்? நீங்கள் பயந்து போவீர்கள். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு பக்தரா? மதத்தில் பிரதிநிதியாக உங்களை காட்டிக் கொள்ள வேண்டாம். ஜெய் ஸ்ரீராம்.
இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். ‘தலைவி’ தவிர்த்து ‘தாக்கட்’, ‘தேஜஸ்’ ஆகிய படங்களிலும் கங்கணா கவனம் செலுத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT