Published : 11 Oct 2020 07:19 AM
Last Updated : 11 Oct 2020 07:19 AM

பொது முடக்கத்துக்குப் பின்னர் முதல் படமாக மீண்டும் வெளியாகிறது பிஎம் நரேந்திர மோடி வரலாற்றுப் படம்

புதுடெல்லி

பொது முடக்க காலத்துக்குப் பிறகு முதல் படமாக பிரதமர் மோடியின் வரலாற்றுப் படம் தியேட்டர்களில் மீண்டும் வெளியாக உள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் அடைக்கப்பட்டன. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் 15-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வரலாற்றுப் படமான ‘பிஎம் நரேந்திர மோடி’ படம் தியேட்டர்களில் மீண்டும் வெளியாக உள்ளது. இந்தப் படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சிறப்பாக நடித்திருந்தார்.

படம் மீண்டும் வெளியிடப்படுவது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறும்போது, “பிரதமர் மோடி, நமது நாட்டின்
மிகச் சிறந்த பிரதமராக உருவாகி உள்ளார். 2019 மக்களவைத் தேர்தல் வெற்றியே இதைச் சொல்லும்.

தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட உள்ள இன்றைய நிலையில், இதுபோன்ற மிகவும் எழுச்சியூட்டும் தலைவரின் கதையைப் பார்ப்பதை விட சிறந்தது என்ன இருக்க முடியும். அதனால்தான் படத்தை மீண்டும் வெளியிடுகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x