Published : 02 May 2020 03:46 PM
Last Updated : 02 May 2020 03:46 PM
அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் பணமும் இல்லை என்று இயக்குநர் அனுராக் காஷ்யப் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் என்பது ஒருசில மாநிலங்களைத் தவிர்த்து, இதர மாநிலங்களில் இன்னும் குறையவில்லை. இதனால் கரோனா ஊரடங்கை மே 17-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைச் சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனிடையே தொடர்ச்சியாக பாஜக அரசை தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாடிவரும் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து கூறியிருப்பதாவது:
"ஊரடங்கு தொடரும், அதை நிறுத்த மாட்டார்கள். அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை, பணமும் இல்லை. அனைத்துக் கட்சிகளும், பொருளாதார நிபுணர்களும், விஞ்ஞானிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து வந்து ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டிய நேரம் இது. இதற்கான முன்னெடுப்பு பிரதமரிடமிருந்துதான் வர வேண்டும்".
இவ்வாறு இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
Lockdowns will keep going on.. they’re not going to stop.The government has no plan, no strategy and has no money either. It’s time for all parties, economists, scientists, corporates to come together, And find a workable solution. Initiative has to come from the PM himself .
— Anurag Kashyap (@anuragkashyap72) May 1, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT